திமுக தலைவர் கருணாநிதி, காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல் நிலை குறித்த அறிக்கையை   வெளியிட்டது காவேரி மருத்துவமனை.இன்றுடன் 10 ஆவது நாளாக சிகிச்சை பெற்று வரும் கலைஞரின் உடல் நிலையில் இன்று மதியம் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது என தகவல் வெளியானது.

கடந்த 27 ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் திடீர் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். 
அதன்பின், அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை  அடுத்து கடந்த நான்கு நாட்களாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார் கருணாநிதி

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள, மருத்துவமனை  அறிக்கையில், கலைஞரின் உடல் நிலை கவலைகிடமாக உள்ளது என்றும் எடுத்த 24  மணி நேரம் கழித்தே எதையும் சொல்ல முடியும் என்றும் தெரிவித்து உள்ளது காவேரி மருத்துவமனை. மேலும், வயது மூப்பு காரணமாக உடல் உறுப்புகளை செயல்பட வைப்பது பெரும் சவாலாக உள்ளது என்றும் மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளனர் 

இதனை தொடர்ந்து காவேரி மருத்துவமனைக்கு, உறவினர்கள் தொண்டர்கள் என அவசர அவசரமாக விரைய தொடங்கி உள்ளனர்.