ஈரோடு

உடல்நலக்குறைவால் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை கேட்டு இரண்டு நாள்களாக உணவு உண்ணாமல் மன இறுக்கத்தில் இருந்த திமுக தொண்டர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனைக் கேட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர்.

இந்த நிலையில் இரண்டு நாள்களாக உணவு உண்ணாமல், மன இறுக்கத்துடன் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கச் சென்றுள்ளார் ஜனார்தனன். மறுநாள் காலை அதாவது நேற்று காலை அவர் எழவே இல்லையாம். மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்தபோது அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளாஅர் என்பது தெரியவந்தது. இதனால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மிகுந்த வேதனை அடைந்து கதறி அழுதனர்.