Karunandhi Birthday wishes

திமுக தலைவர் கருணாநிதி, நாளை மறுநாள் 94வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல தொண்டர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கருணாநிதிக்கு வாழ்த்து சொல்வதற்க இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது.

பிறந்தநாள் முன்னி ட்டு கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக தனி இணையதளத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.www.wishthalaivar.com என்னும் இணையதளம் இதற்காக தொடங்கி செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கலாம்.

இணையதளம் தொடங்கப்பட்ட ஒரே நாளில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் இருந்து கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் லட்சக்கணக்கில் குவிந்தன. நேற்று மதியம் வரை 20 லட்சத்துக்கு மேற்பட்டோர் கருணாநிதிக்கு இணையதளம் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித் தனர்.

மீதம் உள்ள 2 நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் பல லட்சமாக உயரும் என்று கூறப்படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து கனடா, ஆஸ்திரேலியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அரபுநாடுகள் போன்ற நாடுகளில் இருந்து அதிகளவில் வாழ்த்துகள் வந்த வண்ணம் உள்ளன.