karthi chidhambaram will be arrested in bribe case
ஐ.என்.எக்ஸ் நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்ற புகாரில் கார்த்தி சிதம்பரம் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து எந்நேரத்திலும் அவர் கைது செய்யபடுவார் என தெரிகிறது.
ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீட்டு அளவை குறைத்து காட்டி அனுமதி வழங்கி உள்ளனர்.
இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதைடுத்து தற்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் வீடு அலுவலகங்கள் உள்ளிட்ட 17 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு நடத்தி வருகிறது.
மேலும் கார்த்தி சிதம்பரத்திடமும் வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே சி.பி.ஐ அமைப்பை மத்திய அரசு தவறாக வழி நடத்தி வருகிறது என ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தகவல்ககள் தெரிவிக்கின்றன.
