தஞ்சாவூர்

கார்த்தி சிதம்பரத்தின் மீது போடப்பட்ட வழக்கை திரும்பபெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டி தஞ்சாவூரில் காங்கிரசு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகர் மாவட்ட காங்கிரசு கட்சி சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமைத் தாங்கினார். முன்னாள் மாவட்டத் தலைவர் நாஞ்சி.வரதராஜன், நிர்வாகி ஜோசப்ராஜ், சிறுபான்மை பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஜேம்ஸ், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் தியாகராஜன், வக்கீல் பிரிவு தலைவர் ஜான்சன், பட்டதாரி அணி தலைவர் லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ததை கண்டிப்பது,

அவர் மீது போடப்பட்ட வழக்கை திரும்பபெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" போன்றவற்றை வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோட்டத் தலைவர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் இறுதியில் தஞ்சை மாவட்டப் பொருளாளர் பழனியப்பன் நன்றித் தெரிவித்தார்.