பெங்களூர் தன்னையும் தனது மனைவி மனைவி ரூபா மிரட்டி கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி பீமசங்கர் எஸ்.குல்ட் என்பவர் மிரட்டி பலாத்காரம் செய்ததாக கோரமங்களாவை சேர்ந்தவர் ஐடி ஊழியர் சுரேஷ் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகரை அடுத்து, அவ்விருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகளை மீடியாக்களுக்கு மத்தியில் வெளியிட்டார்.

இதுபற்றி சுரேஷ் கூறுகையில், எனது மனைவி ரூபா போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார். தாவணகெரே எஸ்பியாக பீமாசங்கர் பதவி வகித்தபோது, தனது இரட்டை குழந்தைகளின் பிறந்த நாள் நிகழ்ச்சியை போட்டோ சூட் எடுக்க ரூபாவை ஐபிஎஸ் அதிகாரி பீமாசங்கர் அணுகினார். அப்போதுதான் ரூபா அறிமுகம் பீமாசங்கருக்கு கிடைத்தது. 

ரூபாவை அடைய வேண்டும் என்பதற்காக, என்னையும், ரூபாவையும் என்கவுண்டர் செய்துவிடுவதாக மிரட்டிய ஐபிஎஸ் அதிகாரி பீமாசங்கர் ரூபாவுடன் உல்லாசம் அனுபவித்தார். இதை பலாத்கார வழக்காக பதிவு செய்ய வேண்டும் என கோரமங்களா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

ஆனால், போலீசார் இந்த வீடியோவை வைத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது இதை பலாத்கார வழக்காக பதிவு செய்ய முடியாது.  497ன்கீழ், புகாரை மட்டும் பதிவு செய்துள்ளனர். சட்ட வல்லுநர்கள் கருத்தையும் காவல்துறை கேட்டுள்ளது. 

இந்நிலையில், வழக்கில் முக்கிய திருப்பமாக, சுரேஷின் மனைவி ரூபா கணவரின் இந்த புகாரை மறுத்துள்ளார். பீமாசங்கர் தன்னை மிரட்டவில்லை, அவர் தனது நண்பர் என்று கூறியுள்ள அவர், தனது கணவர் சுரேஷ்தான் தன்னை வீட்டில் அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாகவும், தனது கணவரை விட்டு கடந்த சில மாதங்களாக, பிரிந்துதான் வாழ்ந்துவருவதாகவும் அவர் அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.