கோவை மாவட்டத்தில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்.பி.கனிமொழி, செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர் 8 வழி சாலை அமைக்க போடப்பட்ட திட்டம், மக்களுக்காக போட்டப்பட்ட திட்டம் இல்லை என்றும், அதிமுகவினர் தங்களை வளமை படுத்திக்கொள்ள போடும் திட்டம் என கூறுகிறார்.

இந்தியாவில், பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படும் சம்பவம் அதிகரித்து வருவதாக கூறிய கனிமொழி, குறிப்பாக பத்திரிக்கையாளர்கள் யாருக்கும் கருத்துரிமை இல்லை என்றும் அவர்கள் அச்சுரிதப்படுவதாகவும்.  தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டு உயரிழக்கும் சம்பவம் மற்றும் கைது செய்யப்படுவதும் தொடர்வதாக தெரிவித்தார். ஆனால் இது குறித்து பத்திரிக்கையாளர்கள் பேச வில்லை என்றும் தாங்கள் தான் தொடர்ந்து பேசி வருவதாகவும் கூறினார்.

தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளதாக முதலமைச்சர் கூறியுள்ளதற்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில். மற்றொரு ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் உலகிலேயே இந்தியாவில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. பெண்கள் வாழவே தகுதி இல்லாத இடமாக இந்தியா முதல் இடத்தில் இடம் பெற்றுள்ளதாகவும், அப்படிப்பட்ட மத்திய அரசுக்கு தான் ஆளும்கட்சி பினாமி ஆட்சி நடத்தி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.