தமிழகத்தில் இருந்து முதல் பெண்ணாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் அந்த பதிவை ராணுவம் நீக்கியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கனிமொழி வாழ்த்து பதிவை நீக்கியது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேஜர் பதவி- முதலமைச்சர் வாழ்த்து
தமிழகத்தை சேர்ந்த பெண்மனி இக்னேஷியஸ் டெலோஸ் ஃப்ளோராவிற்கு மேஜர் ஜெனரல் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக ராணுவம் ட்விட்டர் பதிவு செய்திருந்தது.இந்த பதிவை சுட்டிக்காட்டிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ட்விட்டர் ஒன்று வெளியிட்டு இருந்தார் அதில், பெண்களால் முன்னேறக் கூடும் - நம் வண்தமிழ் நாடும் எந்நாடும்! மேஜர் ஜெனரல் இக்னேஷியஸ் டெலோஸ் ஃப்ளோராவின் சிறப்பான சாதனைக்கு வாழ்த்துகள்!
டுவிட்டரை நீக்கிய ராணுவம்
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியைச் சேர்ந்த முதல் பெண்மணி மேஜர் ஜெனரல் பதவியை எட்டியது நம்பமுடியாத மைல்கல். அவரது அற்புதமான தொழில், சேவை மற்றும் ஆர்வத்திற்கு வணக்கங்கள்'' என்று கூறியிருந்தார்.மேஜர் பதவி உயர்வு குறித்து டிவிட்டரில் ராணுவம் வெளியிட்ட பதிவை சுட்டிக்காட்டி நேற்று (02/08/2023) நண்பகல் 12.32 மணிக்கு இந்த வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த பதிவை ராணுவம் திடீரென நீக்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
நீக்கியதன் பின்னி என்ன.?
தமிழ்நாடு முதலமைச்சர், தனது மாநிலத்திலிருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய பதிவை NorthernComd_IA ஏன் நீக்க வேண்டும்? இதன் பின்னணி என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படியுங்கள்
