kamalhaasan see the pattinappakkam fishermans area
சென்னை பட்டினபாகம் கடல் அரிப்பால் சேதம் அடைந்துள்ள 300க்கும் மேற்பட்ட வீடுகளை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமலஹாசன் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதம் கூறினார்.
கடல் அரிப்பு:
சென்னை பட்டினபாக்கத்தில் கடல் அரிப்பு காரணமாக கடற்கரை ஓரங்களில் அமைந்திருந்த 300 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதால் மீனவ மக்கள் பலர் வீட்டை இழந்து சாலைகளில் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. 
உடமைகள் இழந்த மீனவர்கள்:
இந்த கடல் அரிப்பு காரணமாக பல மீனவர்கள் தங்களின் வலை, கட்டுமரம் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை இழந்துள்ளதாக கூறி அழுது புலம்பி வருகின்றனர்.
கமல் ஆறுதல்:
இந்நிலையில், தற்போது நடிகர் கமல்ஹாசன் முதல் ஆளாக ஓடி போய், கடல் சீற்றத்தால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் விரைவில், இவர்களுக்கு மாற்று வீடு வழங்க அரசு ஏற்பாடு செய்ய முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதே போல் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து தருவதாகவும் கமல் வாக்குறுதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
