சென்னையில், மாநகராட்சி மற்றும் தனியார் வசம் உள்ள பொது கழிப்பிடங்களின் நிலைகுறித்து பொதுமக்கள், மாநகராட்சி அலுவலர்கள் அறியவும், அவற்றை சீர்செய்து பராமரிக்கவும் உதவும்வகையில் கழிப்பறை தரவுகள் அடங்கிய 'KAKOOS' செயலியை திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

சென்னையில், மாநகராட்சி மற்றும் தனியார் வசம் உள்ள பொது கழிப்பிடங்களின் நிலைகுறித்து பொதுமக்கள், மாநகராட்சி அலுவலர்கள் அறியவும், அவற்றை சீர்செய்து பராமரிக்கவும் உதவும்வகையில் கழிப்பறை தரவுகள் அடங்கிய 'KAKOOS' செயலியை திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சர்வதேச கழிப்பறை திருவிழா 2022 சென்னை மயிலாப்பூரில் சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், துப்புரவு பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மாநகராட்சி பொது கழிப்பிடங்களை சிறப்பா பாரமரிக்கும் பணியாளர்களையும் கவுரவித்தார். 

மேலும் நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட உயிரை பணயம் வைத்து தூய்மை பணியில் ஈடுப்பட்டு நீங்கள் தான் முன்களப் பணியாளர் என்று குறிப்பிட்டார். பெண்களுக்கும் மாற்றுதிறனாளிக்கும் மிகுந்த பயனுள்ளதாக இந்த செயலி இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் கக்கூஸ் என்ற வார்த்தை பயன்படுத்தவே தயக்கம் காட்டும் நிலையில், அந்த பெயரிலே செயலியை உருவாக்கி இந்த முயற்சி பாராட்டுக்குரியது என்று கூறினார். 

பொது கழிப்பிடங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மாநகராட்சியின் இந்த முன்னெடுப்பு, தமிழ்நாடு விரிவுப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் இந்தியாவிலே நம்பர் 1 முதலமைச்சராக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் என்று அனைவரும் சொல்வது போல,இந்தியாவிலே தூய்மையான கழிப்பறை கொண்ட மாநகரமாக சென்னையை மாற்றும் இலக்கை நோக்கி அனைவரும் பயணிப்போம் என்று வலியுறுத்தினார்.

முன்னதாக சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் வசம் உள்ள பொது கழிப்பிடங்களின் நிலைகுறித்து பொதுமக்கள், மாநகராட்சி அலுவலர்கள் அறியவும், அவற்றை சீர்செய்து பராமரிக்கவும் உதவும்வகையில் கழிப்பறை தரவுகள் அடங்கிய 'KAKOOS' செயலியை அவர் தொடங்கி வைத்தார். மேலும் கழிப்பறை திருவிழா அரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார்.

பொது கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருத்தல், பொது இடங்களில் மலம், சிறுநீர் கழிப்பதை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேசும் வகையில் இந்த விழிப்புணர்வு வீடியோ அமைந்து இருந்தது.சேப்பாக்கம் தொகுதியில் என் மனைவி கிருத்திகா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். என்னை விட சேப்பாக்கம் தொகுதியில் அவர்தான் அதிகம் சுற்றிக்கொண்டு இருக்கிறார். ஒரு சின்ன பயமும் எனக்கு இருக்கிறது. அடுத்த தேர்தலில் நான் தொகுதி மாற வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற பயம் இருக்கிறது என்று பேசினார்.