எச்சரிக்கை மணி : இரண்டரை மீட்டர் உயரும் கடல் சீற்றம்...! 21,22 ஆம் தேதியில்...!

கன்னியாக்குமரி மற்றும் ராமநாதபுரம் கடற்பகுதியில் 21 ஆம் தேதியான நாளை மற்றும் 22  ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் கடல் அலையின் சீற்றம் இரண்டரை மீட்டர் உயரத்திற்கு அதிகமாக இருக்கும் என  எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது

இது குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்  செய்தியாளர்களின் சந்திப்பில் தெரிவித்தது..

தொடர்ந்து ஒரே பகுதியில், ஈரப்தமான மேலடுக்கு சுழற்சி காணப் படுவதாலும், காற்றும் 45  கிமீ வேகத்தில் இருக்கும் என கூறப்படுகிறது

21 ஆம் தேதி காலை 8.30 மணி  முதல் கடல் சீற்றம் அதிகமாக காணப் படும் என்றும், 22 ஆம் தேதியும் கடல் அலைகள் இரண்டரை மீட்டர் உயரத்திற்கு அதிகமாக எழும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

மீனவர்கள்

மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் இருப்பது நல்லது  என்றும், தாழ்வான பகுதியில் வசிக்க கூடிய மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சத்யகோபால் தெரிவித்து உள்ளார்

இது தவிர கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்றும் விவரத்தை மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மாவட்ட ஆட்சியர் முனெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது

மீன்பிடி தடைக்காலம் என்பதாலும், மீன்களின் இனப்பெருக்க நேரம் என்பதால், மீனவர்கள் பெரும்பாலும் நாட்டு படகுகளிலும், கட்டு மரங்களிலும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வார்கள்.

எனவே இந்த இரண்டு நாட்களுக்கு மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல  வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது