கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கபினி அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மேலும் கேஆர்எஸ் அணையில் இருந்தும் 5000 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒகேனக்கலில் காவிரி பொங்கிப் பாய்கிறது.

இதையடுத்து மேட்டூர் அணைக்கு கிட்டத்தட்ட 40 ஆயிரம் கன அடிநீர் வந்து கொண்டிருப்பதால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பான ஒரு வீடியோ தொகுப்பு.