Just now happen collage student Hacked

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை கழக மாணவியர் விடுதியில் தங்கி உள்ள விவசாய தோட்டகலை மாணவியின் கழுத்து அறுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் படித்துவரும் விவசாய தோட்டகலை மாணவி லாவண்யா அதே பல்கலை கழக மாணவியர் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

அதே பல்கலை கழகத்தில் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவன் அந்த மாணவியின் கழுத்து கத்தியால் அறுத்துள்ளார். அந்த மாணவனின் இந்த கொடூரமான செயலைக் கண்ட பொதுமக்கள் உடனே அந்த மாணவனை கள் எடுத்து சரமாரியா தாக்கியுள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த அண்ணாமலை நகர் போலீசார் அந்த மாணவனைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் அண்ணாமலை பல்கலைகழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கழுத்து கொடூரமாக அருக்கபட்டதால் நிலைகுலைந்த மாணவி லாவண்யா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மாணவி லாவண்யா மீது இந்தக் கொடூரக் கொலைவெறித் தாக்குதல் என்ன காரணம்? காதல் விவகாரமா இருக்குமா என்பது குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.