just click on it and show it to your babe

மாத்தி யோசி, குகன் உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இசையமைப்பாளர் குரு கல்யாண்.

ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு இசை அமைப்பாளர் குரு கல்யாண் "தத்தை தத்தை 2" என்ற இசைக்காணொளியை வெளியிட்டுள்ளார். 

அதன்படி, 

குழந்தைகள் ஒரு வரம் அவர்கள் தரும் மகிழ்வு இணையில்லாதது. மகாகவி பாரதியின் வரிகளை இளைய சமுதாயத்திற்கு கொண்டு சேர்க்கும் விதமாக, அவருடைய "பாப்பா பாட்டு" கவிதையிலிருந்து ஒரு பகுதியை இசை அமைத்து இன்று குழந்தைகள் தினத்திற்கு வெளியிட்டுள்ளார். 

சென்ற வருடம் இதே நாளில் "தத்தை தத்தை" என்ற பாடலை அவருடைய இணையதளமான குருகல்யாண்மியூசிக்கில் வெளியிட்டு பெருத்த வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற பாடல்கள்

இதற்கு முன்னதாக கடந்த ஒரு வருடமாகவே ஜல்லிக்கட்டு பாடல், புதுக்கவிதை பாடல், இளையதளபதி ரசிகன்டா போன்ற பாடல்களை வெளியிட்டுள்ளார்.அந்த வரிசையில் குழந்தைகள் தினத்தையொட்டி அவர்களுக்கு தன்னுடைய அன்பான வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக இந்த சிறப்பு பாடலை வெளியிட்டுள்ளார்.

பாடல் இதோ..!
ஓடி விளையாடு பாப்பா....
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா......

முழு பாடல் இதோ ...

https://youtu.be/lnQ0Mxk4CJ4