குவைத், ஓமன் நாடுகளுக்கு வீட்டு வேலை, மெஷின் ஆபரேட்டர் போன்ற பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் சேர்ப்பு அறிவிப்பை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” ஓமன் நாட்டில் காஸ்டிங், இன்ஸ்பெக்‌ஷன், மெஷின் ஆபரேட்டர் பணிக்கு 2 ஆண்டு அனுபவம் உள்ள 22 முதல் 25 வயதுக்கு உட்பட்ட 162 சென்டி மீட்டர் உயரம் மற்றும் 60 கிலோ உடல் எடைக்கு மேல் உள்ள டிப்ளமோ எலக்ட்ரிக்கல், மெக்கானிக் மற்றும் ஐ.டி.ஐ. பிட்டர், டர்னர், வெல்டர் படித்த ஆண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். மாத ஊதியமாக ரூ.35 ஆயிரம் மற்றும் உணவு, இருப்பிடம், விமான டிக்கெட் போன்றவை ஓமன் நாட்டில் வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் படிக்க:TNPSC புதிய அறிவிப்பு.. சிறை அலுவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு தேதி வெளியீடு.. எப்படி விண்ணப்பிப்பது..?

குவைத் நாட்டில் வீட்டு பெண் பணியாளராக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் சுய விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் மின்னஞ்சலுக்கு அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுதொடர்பாக கூடுதல் விவரங்களை பெற 044-22505886, 22502267 என்ற தொலைபேசியிலும், 95662-39685 என்ற வாட்ஸ்-அப்பிலும் தொடர்பு கொள்ளலாம்.ஓமன் நாட்டுக்கு பணிக்கு செல்ல விருப்பமுள்ளவர்கள் சுய விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் omce80@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க:கரூர் வைசியா வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இங்கே

இது அரசு நிறுவனம் என்பதால் இந்த நிறுவனத்தின் கீழ் இடைத்தரகரோ, ஏஜெண்டுகளோ இல்லை. விருப்பம் உள்ளவர்கள் இந்நிறுவனத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.ஓமன் நாட்டுக்கு பணிபுரிய செல்பவர்கள் விசா கிடைத்த பின்பு இந்நிறுவனத்துக்கு சேவைக்கட்டணமாக ரூ.35,400 செலுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.