TNPSC புதிய அறிவிப்பு.. சிறை அலுவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு தேதி வெளியீடு.. எப்படி விண்ணப்பிப்பது..?
டிஎன்பிஎஸ்சி தற்போது தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறையில் காலியாக உள்ள சிறை அலுவலர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: 8
பணியின் பெயர் : சிறை அலுவலர்
பணியின் விவரம்:
சிறை அலுவலர் (ஆண்கள்) - 6
சிறை அலுவலர் (பெண்கள்) - 2
விண்ணப்பிக்கும் தேதி:
இப்பணிகளுக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் அக்டோபர் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.tnpsc.gov.in,www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க:போக்குவரத்து கழகத்தில் NCRTCயில் சூப்பர் வேலை.. யாரெல்லாம் தகுதி..? எப்படி விண்ணப்பிப்பது..? விவரம் இதோ..
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகம் மற்றும் சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் வயது 32க்குள் இருக்க வேண்டும். மேலும் எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயவரம்பு இல்லை என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் சம்பளமாக ரூ.38,900 - ரூ.1,35,100 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யபடவுள்ளனர். டிசம்பர் 22 ஆம் தேதி முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 12.30 வரை தாள்-1க்கான தேர்வும், பிற்பகல் 2.30 முதல் 5.30 வரை தாள்-2க்கான தேர்வும் நடைபெறுகிறது.
மேலும் படிக்க:ரூ. 1 லட்சம் சம்பளத்தில் சென்னையில் மத்திய அரசு வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? விவரங்கள் இதோ..