jio new year offer announced today

ஜியோ வந்ததோ வந்தது மக்கள் மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களை மறந்து விட்டனர் என்று சொல்லும் அளவிற்கு, இன்றைய இளைஞர்கள் அதிக அளவில் ஜியோவைதான் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், ஜியோ உடனான போட்டியை சமாளிக்க மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் பல அதிரடி சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொண்டது

இந்நிலையில்,புத்தாண்டை ஒட்டி, ஜியோ மாபெரும் சலுகையை அறிவித்து உள்ளது .

அதன்படி ரூ.199 க்கு புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டு உள்ளது

ரூ.199 கு ரீசார்ஜ் செய்தால்,

28 நாட்களுக்கு தினமும் 1.2GB டேட்டா கிடைக்கும்

ரூ.299க்கு ரீசார்ஜ் செய்யும் போது

28 நாட்களுக்கு தினமும் 2GB டேட்டா கிடைக்கும்

குறிப்பு

முன்னதாக, தினமும் 1GB டேட்டா பெற ரூ.309 க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஆனால் தற்போது ரூ.199 கு ரீசார்ஜ் செய்தாலே 28 நாட்களுக்கு தினமும் 1.2GB டேட்டா பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த புத்தாண்டு சலுகை, இன்று முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதன் காரணமாக. ஜியோ வாடிக்கையாளர்கள் படு குஷியில் உள்ளனர்.