நீட் தேர்வு மசோதாவுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று தர வேண்டுமென பிரதமரை வலியுறுத்தியதாகவும், இதுகுறித்து பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை, எம்.பி. நவநீத கிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், அன்பழகன், சிவி சண்முகம், தங்கமணி, விஜயபாஸ்கர், உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடியை  நேரில் சந்தித்துப் பேசினர்.

அவரிடம் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்பிய அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளரகளை சந்தித்தார். அப்போது, நீட் தேர்வு மசோதாவுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று தர வேண்டுமென பிரதமரை வலியுறுத்தியதாகவும், இதுகுறித்து பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது எனவும் வலியுறுத்தியதாகவும் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.