சென்னையில் அமைந்துள்ள ஜேப்பியார் குழுமத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி ரெய்டில் ரூ.8 கோடி சிக்கியது.
1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து வருமான வரித்துறையினர் கருப்பு பணத்தை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கி வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ரூபாய் நோட்டுகளை மாற்றும் விவகாரத்தில் சென்னை முழுதும் கமிஷன் கணக்கில் கோடிகள் கைமாறுவதாக புகார் எழுந்துள்ளது. பொதுமக்களுக்காக அனுப்பப்படும் பணத்தை வங்கி அதிகாரிகளே கமிஷன் பெற்றுக்கொண்டு வெள்ளைப்பணமாக மாற்றுவதாக் புகார் எழுந்துள்ளது.

 சென்னை முழுதும் அமோகமாக நடக்கும் இந்த பணமாற்ற விவகாரத்தில் 20% முதல் 30% வரை கமிஷனாக வங்கி அதிகாரிகள் மற்றும் இடைதரகர்களுக்கு கிடைக்கிறது. இவ்வாறு நடக்கும் பணபறிமாற்றத்தை பற்றி கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னையிலுள்ள ஜேப்பியார் குழுமத்தில் வருமான வரித்துறையினர் திடீரென அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். 

ஜேப்பியார் குழுமத்துக்கு சொந்தமான 6 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். இதில் ஜேப்பியார் குழுமத்துக்கு சொந்தமான கேளம்பாக்கத்திலுள்ள ஜேப்பியார் இன் ஜினியரிங்க் கல்லூரி , ஜேப்பியார் யூனிவர்சிட்டி , பனிமலர் இன் ஜினியரிங் கல்லூரி நசரத் பேட்டை , சூளைமேடு , சத்யபாமா இன்ஜினியரிங் கல்லூரி சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. 

ரூ.8 கோடி மதிப்புள்ள இதில் பழைய கரன்சி நோட்டுகள் சிக்கின. இந்த நோட்டுகளை வெள்ளை நோட்டுகளாக மாற்ற வைத்துள்ளதாக கூறப்படுகிறது.