தமிழக இளைஞர்களின் எழுச்சியை தடுக்க முடியுமா ?…ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொந்தளிக்கும் கிரிக்கெட் வீரர் ஜடேஜா…

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டக்காரர்களுக்கு எதிராக மின்சாரத்தை தடை செய்யலாம்,,,ஆனால் இளைஞர்களின் எழுச்சியை யாராலும் தடை செய்யமுடியாது என கிரிக்கெட் வீரர் தமிழக அரசுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் குட்டு வைத்துள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சசநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லுரில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பிற்கு எதிராகவும் அலங்காநல்லுரில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

இளைஞர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அலங்காநல்லுரில் இன்று மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்த கைதைக் கண்டித்தும்,பீட்டா அமைப்பை தடைசெய்ய வலியுறுத்தியும் சென்னை மெரினா கடற்கரையில் தன்னெழுச்சியாக திரண்ட இளைஞர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போன்று கடந்த 20 மனி நேரமாக கோவை வஉசி திடலில் கூடியுள்ள பொது மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வீரியம் அடைந்துள்ளது.

அதேநேரத்தில் ஜல்லிக்கட்டுக்கு திரையுலகினரும், கிரிக்கெட் வீரர்களும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்தை அரசியல்வாதிகேளே போய் பாருங்கள்..அவர்களது கோரிக்கைகளுக்கு செவி சாயுங்கள் என தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்களுக்கு எதிராக மின்சாரத்தை தடை செய்யலாம்,,,ஆனால் இளைஞர்களின் எழுச்சியை யாராலும் தடை செய்யமுடியாது என தமிழக அரசுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் குட்டு வைத்துள்ளார்.

அதுமட்டுமல்ல தமிழ்நாடும் இந்தியாவில்தான் இருக்கிறது என ஜல்லிகட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களை கண்டு கொள்ளாத மீடியாக்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.