தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட தகவல் அறிந்து ஜெர்மன் புறப்படத் தயாராக இருந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னை திரும்புகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து முதல்வரின் உடல் நலன் தேறி வருவதாக கூறப்பட்டு வந்தது. முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என கூறப்பட்ட நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு இதய மற்றும் சுவாசவியல் நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த தகவல் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் “ நான் ஜெர்மன் நாட்டுக்கு ஒரு வேலையாக புறப்படத் தயாராகிக் கொண்டு இருந்தேன். அப்போது, முதல்வர்ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல் அறிந்ததும் பயணத்தை ரத்து செய்துவிட்டு, சென்னை திரும்பிக்கொண் டு இருக்கிறேன். அவரின் உடல்நிலை குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்றார்.