முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் 22ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையொட்டி கடந்த 4ம் தேதி இரவு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு தீவிர அளித்தும், பலனின்றி 5ம் தேதி நள்ளிரவில் காலமானார்.
இதற்கிடையில், முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதுபற்றி ஊடகங்களில் தினமும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 நாட்கள் மருத்துவ சிகிச்சை குறித்து எவ்வித தகவலும் வெளிவரவில்லை. இதனால், அவர் ஏற்கனவே இறந்து இருக்கலாம் என பேசப்படுகிறது.
இந்நிலையில், புதிதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில், கடந்த 5ம் தேதி மாலை 7 மணியளவில் அப்பல்லோவில் இருந்து போயஸ் கார்டன் பணியாளர் ஒருவருக்கு போன்செய்துள்ளனர்.

அப்போது ஜெயலலிதாவின் பச்சை கலர் மடிசார் புடவை, கைக்கடிகாரம், வைர டாலர் செயின், மோதிரம் ஆகியவற்றை உடனே கொண்டு வரும்படி கூறியுள்ளனர். அவற்றை எடுத்து சென்றதுதனக்கு தெரியும் என ஒரு அதிகாரி வார பத்திரிகைக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த அதிகாரி, போயஸ் கார்டனில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, அம்மா காலமானார் என்ற செய்தி எந்த நேரமும் வெளியாகலாம் என அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். இந்தசெய்தி ஜெயலலிதா ஏற்கனவே இறந்ததை உறுதி செய்வதாக உள்ளது.
அதை மறைப்பதற்காக, நேரம் ஆன பிறகு அவர் இறந்ததை தெரிவித்துள்ளனர் என அந்த அதிகாரி கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
