முதல்வர் ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்பியதாக முகநூல் மனநோயாளிகள் மேலும் இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 22 ஆம் தேதி உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனும்திக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்து 9 மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல்வருக்கு 4 வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் உடல்நிலை குறித்து அவதூறாக முகநூல், வாட்ஸப், டுவிட்டரில் வதந்தி கிளப்பும் ஆசாமிகள் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வரும் நிலையில் புகார்களை பெற்ற சைபர் பிரிவு போலீசார் இதுவரை 53 வழக்குகள் பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இன்று மேலும் இரண்டு இரண்டுபேரை கைது செய்துள்ளனர். ஒருவர் பெயர் பாலசுந்தரம்(42) பம்மலை சேர்ந்த இவர் தனியார் நிறுவன ஊழியர் ஆவார். இன்னொரு நபர் திருமேனிச்செல்வம் இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் ஆவார்.
இவர்களுக்கு அரசியல் பின் புலம் கிடையாது. முகநூலில் எதையாவது போட்டு லைக், ஷேர் வாங்கும் எண்ணம் கொண்ட நவீன மனநோயாளிகள். இவர்கள் லைக் ஷேருக்கு அடிமையானவர்கள் . இதன் விளைவு இன்று கம்பி எண்ணுகிறார்கள்.
