அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வரான ஜெயலலிதா இதயம் செயல் இழப்பால் நேற்று இரவு 11.30 மணி அளவில் மரணம் அடைந்தார். அவரின் மறைவையொட்டி தமிழக அ ரசு 7 நாட்கள் துக்கம் அணுசரித்துள்ளது. 

மேலும் பள்ளி, கல்லூரிகள் என அனைத்துக்கும் இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் அனைத்திலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

பொதுவாக, முதல்வர், பிரதமர் பதவியில் இருப்பவர்கள் பதவியில் இருக்கும் போதே இறந்துவிட்டால் 7 நாட்கள் துக்கம் அணுசரிக்கப்படுவது வழக்கம். 

தலைவர்கள் திடீரென இறக்கும் போது அவர்களுக்கு அஞ்சலி செலுத்த மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள். அப்போது பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டால் தேவையில்லாத அசம்பாவிதங்கள் ஏற்படும் என்பதற்காகாவும், மாணவர்களும் அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காகவும் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. 

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக, ராஜாஜி அரங்கில் வைக்கப்பட இருக்கிறது.