முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர், லட்ச கணக்கான பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பெரிதும், எதிர்பார்க்க பட்ட ஜெயலலிதாவின் உடன் பிறந்த அண்ணன் ஜெயராமனின் மகள் தீபா, மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று தனது அத்தையின் உடலை காண மணிகணக்கில் காத்திருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தி சென்ற பிறகே, தீபா விற்கு அஞ்சலி செலுத்த அனுமதி கிடைத்தது, பொது மக்கள் வரிசையில் வந்த தீபா ஒரு சில நொடிகள் மட்டுமே அஞ்சலி செலுத்தி விட்டு வந்த வழியாக உடனடியாக திரும்பினார்.