முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடல் லட்சோபலட்சம் தொண்டர்களின் கண்ணிருக்கிடையே அவரது ஆசானும், வழிகாட்டியுமான புரட்சித் தலைவர் எம்.ஜி,ஆர், நினைவிடம் அருகே அவரின் விருப்ப்ப்படி நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது, தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் தொடர்ந்து ஜெ,வின் சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெ உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது, அதற்கான பணிகளை பொதுப்பணித்துறை தொடங்கியுள்ளது.

இன்று காலை தமிழக அரசின் பொதுப் பணித்துறை அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்தனர்,இதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் விரைவில் ஜெ வுக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,
