தம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை முதலமைச்சர் ஜெயலலிதா நன்கு அறிகிறார் என அப்போல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

அப்போல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு 45 நாட்கள் கடந்து விட்ட நிலையில் இதுவரை பேட்டியளிக்காமல் மவுனம் காத்தும் பத்திரிக்கையாளர்களிடம் எஸ்கேப் ஆகியும் வந்தவர் அந்த மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டி.
தற்போது முதன்முறையாக செய்தியாளர்களை அழைத்து முதல்வரின் உடல்நலம் குறித்து வாய் திறந்திருப்பது முக்கியவத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அவரது பேட்டியின் சாராம்சம் இதோ.....

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடல்நலம் நன்றாக தேறி வருகிறது.
மருத்துவம் ஒருபக்கம் நன்றாக இருந்தாலும் ஜெயலலிதா மனோ திடத்தோடு இருக்கிறார். இது மிகபெரிய பலன் அளித்து வருகிறார்.
குறிப்பாக தம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை முதலமைச்சர் ஜெயலலிதா நன்றாக உணர்ந்து வருகிறார் என்ற முக்கிய தகவலையும் தெரிவித்துள்ளார்.
