ஜனவரி 23 ல் தமிழக சட்டப் பேரவை முதல் கூட்டத்தொடர் ?

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர்  உரையுடன் வரும் 23-ந் தேதி தொடங்கும் என்று தகவல்கள்  வெளியாகியுள்ளன..

தமிழக சட்டசபையின் நிகழ்ச்சிகள் ஆளுநர் உரையுடன் ஒவ்வொரு ஆண்டும் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கூட்டத்தொடர் வரும், 23-ந் தேதி தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

23 ஆம் தேதியன்று ஆளுநர் பங்கேற்று உரையாற்றுவார் என கூறப்படுகிறது.

சட்டப்பேரவை  கூட்டத்தொடரை கூட்டுவது  தொடர்பாக அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆளுநர் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரிடம் விவாதித்து சட்டப்பேரவையை  கூட்டத்தொடர் தொடங்கும் தேதி முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டசபையில் ஆளுநர் உரையாற்றிய மறுநாளில் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தொடர் சுமார் ஒரு வாரம் வரை நீடிக்கும் என்று தெரிகிறது. ஆளுநர்  உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் மீது அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் விவாதிப்பார்கள். இதனைத் தொடர்ந்து கூட்டத் தொடரின் கடைசி நாளில் உறுப்பினர்களின் விவாதத்திற்கு ஓபிஎஸ் பதில் அளித்துப் பேசுவார்.