திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தலை ஜல்லிக்கட்டு அர்வலர்கள்,புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வேட்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடந்து வருகிறது. இதில் திமுக, அதிமுக, தேமுதிக உள்பட பல கட்சியினர் போட்டியிடுகின்றனர்.

இன்று காலை முதல் அனைத்து தொகுதிகளிலும், வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து செல்கின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததை கண்டித்து, திருப்பரங்குன்றம் தொகுதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தேர்தலை புறக்கணிகத்துள்ளனர். பூத் சிலிப்புகளை கிழித்து வாக்குச்சாவடி முன்50க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதை கண்ட அனைத்து கட்சி வேட்பாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.