வலுக்கட்டாயமாக வெளியேற்ற நினைத்தால் கடலில் குதிப்போம்…ஆவேசமான இளைஞர்கள்…

மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறும்படி போலீசார் இன்று அதிகாலை எச்சரித்தனர். மேலும் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.

ஆனால் போராட்டக்கார்கள் வெளியேற மறுத்ததுடன் தொடர்ந்து போலீசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்புவருகின்றனர்.

ஒரு கட்டத்தில் கடலையொட்டி நின்று கொண்டு தங்களை வெளியேற்ற நினைத்தால் கடலில் குதிப்போம் என எச்சரித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் என்ன செய்வது எனத் தெரியாமல் திணறி வருகின்றனர்.

இதனிடையே ஏராளமான இளைஞர்கள் கடலில் குதித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொருவராக கடல் நீருக்குள் இறங்கி தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடத்துள்ளனர்.

காவல் துறை முன்னேறிச் செல்ல செல்ல இளைஞர்கள் தொடர்ந்து கடலுக்குள் இறங்கி வருகின்றனர்.

தொடர்ந்து இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டுள்ள நிலையில் உள்ளனர். முதலில் லத்தி இல்லாமல் இருந்த போலீசார் தற்போது கைகளில் லத்தி வைத்துள்ளனர். இளைஞர்களை நோக்கி போலீசார் நெருங்க நெருங்க அங்கு பதற்றம் நீடிக்கிறது.

இதனைத் தொடர்ந்து காவல் துறை அதிகாரி சங்கர் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அதை ஏற்க மறுத்து விட்டனர்.