ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம்…தமிழில் வீர முழுக்கமிட்ட பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய்…

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என மாநிலம் முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கனடா,சீனா, ஆஸ்திரேலியா,சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் தமிழர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நலையில் தலைநகர் டெல்லியிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருக்குறளை பல்வேறு மொழிகளில் மொழி பெயர்ப்பது, திருக்குறளை பரப்புவது, இந்தியாவின் பல இடங்களில் அய்யன் திருவள்ளுவர் சிலையை நிறுவுவது என தமிழர்களுக்கு மிகவும் பரிச்சயமான பாஜக முன்னாள் எம்,பி. தருண் விஜய் இந்த போராட்டத்தில் ஈடுபட்டார்.


டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் உள்ள பல்வேறுகல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் கைகளில்மெழுகுவர்த்தி ஏந்தி முழக்கமிட்டனர்.

ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம், ஜல்லிக்கட்டு இந்தியாவின் அதிகாரம் என முழக்கமிட்ட தருண் விஜய், ஜல்லிக்கட்டுக்க அனுமதி வழங்கியே தீர வேண்டும் என தெரிவித்தார்.