ஜல்லிக்கட்டு விவகாரம் சென்னையில் பெரும் தீயாய் பற்றி எறிவது தமிழகம் முழுவதும் பெரிய வீச்சை ஏற்படுத்தியுள்ளது.தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக தமிழக அரசு தடுமாறி வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

30 மணி நேரத்தை கடந்து சென்னை மெரீனாவில் கூடியுள்ள கலையாத போராட்ட குழுவினரும் நேரம் செல்ல செல்ல சென்னை முழுவதும் பள்ளி கல்லூரிகளில் இருந்து அலை அலையை வந்து கொண்டிருக்கும் மாணவ மாணவியர் தமிழக அரசை மட்டுமல்ல மத்திய அரசையும் மாநில அரசையும் கண்டித்து போராடி வருகின்றனர்.

தமிழகம் முழுதும் பரவி வரும் போராட்டம் அனைத்து இடங்களிலும் தீயாக பரவி வருகிறது. சென்னை மெரினாவில் 30 ஆயிரம் இளைஞர்கள் மாணவர்கள் கூடியுள்ளனர். இதில் சில பள்ளி மாணவர்கள் தங்களுடைய ஆதார் அட்டையை எரித்து எதிர்ப்பை காட்டினர்.