வெறும் 3000 பேருடன் ஆரம்பித்த மெரீனா போராட்டம் தற்போது ஒரு லட்சம் பெற கடந்து ஓடி கொண்டிருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க நேரலை ஒளிபரப்பு செய்யும் ஆங்கிலம் மற்றும் இந்தி சேனல்களின் எண்ணிக்கையும் அதிரித்து வருகிறது.

தன்னெழுச்சியாக கூடிய இந்த கூட்டம் தற்போது ஒரு லட்சம் பேரை தாண்டியதாக காவல்துறை வட்டாரத்திலிருந்தே தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெரீனாவில் கூடிய கூட்டம் ஒரு இயக்கம் சாராத தனி நபர்கள் முன்னெடுத்த வெற்றிக்கூட்டமாக மாறியுள்ளது.

சுமார் ஒரு லட்சம் பேர் ஒரே இடத்தில கூடியிருப்பதாலும் மேலும் தொடர்ந்து கூட்டம் வந்து கொண்டே இருப்பதாலும் இந்த போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றன மத்திய மாநல அரசுகள்.

ஆனால் விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் அடுத்து என்ன செய்வது எப்படி அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்வது என்று கையை பிசைந்து நிற்கின்றனர் மத்திய மாநில அரசுகள்.