கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனது. இதனால், கடும், வறட்சி ஏற்பட்டு, விவசாய பயிர்கள் கருகி நாசமானது. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, அதற்கான நிவாரண உதவிகளை வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதை தொடர்ந்து, மத்திய அரசிடம் இருந்து நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதற்காக, வறட்சி பாதித்த மாவட்டங்களில் மத்திய அரசு அதிகாரிகள் குழுவினர் தற்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.
வேலூர், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு அதிகாரிகள் குழுவினர், விழுப்புரம் மாவட்டத்தின் வறட்சி பாதித்த பகுதிகளை இன்று ஆய்வு செய்கின்றனர்.

பசுதா மிஸ்ரா தலைமையில் வரும் மத்திய குழுவினர், விழுப்புரம் அருகே உள்ள அரசூர் பகுதியில் காலை 11 மணிக்கு வறட்சி பாதித்த நிலங்களை பார்வையிடுகின்றனர்.

தொடர்ந்து, பேரங்கியூர், பிடாகம் பகுதியில் பயிர்களைப் பார்வையிடுகின்றனர். பிறகு, விக்கிரவாண்டி அருகே பனையபுரம் கிராமத்திலும், தொடர்ந்து திண்டிவனம் அருகே பேரணி கிராமத்திலும், வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிடுகின்றனர்.

இந்த ஆய்வின்போது, விழுப்புரம் மாவட்ட அதிகாரிகளும் உடன் இருந்து, வறட்சி பாதிப்புகள் குறித்து, மத்திய குழுவுக்கு விளக்கி தெரிவிப்பார்கள். அதன்பின்னர், கலெக்டர் எல்.சுப்பிரமணியன் மற்றும் துறை அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர்.