ஜல்லிக்கட்டு போராட்டம் நிமிடத்துக்கு நிமிடம் சூடு பிடிக்கும் வேளையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பெருகி கொண்டு வருகிறது.
Add Asianetnews Tamil as a Preferred Source

மதுரையை சேர்ந்த பெரும்பாலானோர் வேலைக்கு செல்லாமல் அலங்காநல்லூரில் குழுமியிருக்கின்றனர்.

சிறிய கிராமமான அலங்காநல்லூரில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக பலர் திரண்டுள்ளனர்.
எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக தெரிகிறது. இந்நிலையில் அந்த கிராம பெரியவர்கள் ஒன்று கூடி ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இன்றைக்கு 6 மணிக்குள் பிறப்பிக்க மத்திய மாநில அரசுகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி கெடுவும் விதித்துள்ளனர்.

6 மணிக்குள் இரண்டு அரசுகளும் பதில் சொல்லாவிட்டால் தங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என அந்த கிராம மக்கள் மற்றும் போராட்டக்கார்கள் கெடு விதித்துள்ளனர்.
