கோவையில் ரேக்ளா ரேசை தடுத்து நிறுத்திய இளைஞர்கள்… அமைச்சர் வேலுமணியையும் துரத்தி அடித்த மாணவர்கள்…..

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டம் நாளுக்கு நாள் வீரியம் பெற்று வருவதால், அதன் தீவிரத்தை உணர்ந்த தமிழக அரசு, உடனடியாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை பிறப்பித்தது.

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்துக்கு மத்திய உள்துறையிடம் முறைப்படி ஒப்புதல் பெறப்பட்டதையடுத்து கவர்னர் வித்யாசாகர் ராவ் அதில் கையொப்பமிட்டு முறைப்படி அவசர சட்டத்தை பிறப்பித்தார்.

இதனையடுத்து அலங்காநல்லுரில் இன்று ஓபிஎஸ் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் போராட்டக்காரர்களின் கடும் எதிர்ப்பால் ஓபிஎஸ் அலங்காநல்லுருக்குள் நுழைய முடியவில்லை.

இதையடுத்து அங்கு செல்லாமல் நத்தம் பகுதியில் நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை தொடங்கி வைக்க கிளம்பினார். ஆனால் அங்கும் பயங்கர எதிர்ப்பு கிளம்பவே அங்கும் அவரால் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க முடியவில்லை.

ஓபிஎஸ் சால் எங்குமே செல்ல முடியவில்லை,எங்கு சென்றாலும் துரத்தப்படும் நிலைக்கு ஓபிஎஸ் தள்ளப்பட்டுள்ளார், இதே போல் அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்க்ள ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க முயற்சி செய்தனர். அனால் எங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ஆட்சியாளர்கள திணறி வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் உள்ள கொடீசியா அரங்கில் இன்று ரேக்ளா ரேஸ் தொடங்கியது. அமைச்சர் வேலுமணி இதனைத் தொடங்கி வைத்தார். முதலில் மூன்று வண்டிகள் மட்டுமே போட்டியில் கலந்து கொண்ட நிலையில் அங்கு வந்த இளைஞர்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலில் இது குறித்து எதுவும் அறியாமல் வஉசி மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்கள் உடனடியாக கொடீசியா சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ரேக்ளா ரேஸ் நிறுத்தப்பட்டது. போராட்டத்தின்போது அங்கு கூடியிருந்த அதிமுக வினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது, போலீசார் தடுத்து நிறுத்தி மோதலைத் தடுத்தனர்.

அப்போது அவர்களிடையே அமைச்சர் வேலுமணி பேச முயன்றார். ஆனால் அவரை முற்றுகையிட்ட மாணவர்கள் உடனடியாக அவரை அங்கிருந்து விரட்டியடித்தனர்.