அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கான தேதிகளை விழாக்குழுவினர் அறிவித்தனர். முதல்வருக்கு அழைப்பு விடுத்தனர்.
ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டு 2 ஆண்டுகளாக போட்டிகள் நடைபெறாமல் தள்ளிப்போனது.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை தள்ளி வைத்ததும் தமிழகத்தில் தன்னெழுச்சியாக மாணவர் இளைஞர் போராட்டம் வெடித்தது.
தமிழகம் முழவதும் லட்சகணக்கான மாணவர் இளைஞர் போராட்டத்தால் முதல்வர் ஓபிஎஸ் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தார்.

மத்திய அரசின் வழிக்காட்டுதலுடன் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஜன 22 அன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடக்கி வைக்க முதல்வர் ஓபிஎஸ் சென்றார்.
ஆனால் ஜல்லிக்கட்டு துவக்கி வைக்க அங்கிருந்த போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் முதல்வர் சென்னை திரும்பினார்.
இந்நிலையில் 23ஆம் தேதி சட்டம் நிறைவேற்றப்பட்டதும் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது.

இன்று ஜனாதிபதி சட்டத்துக்கு ஒப்புதல் அளித்த நிலையில் சட்டம் உறுதியானது.
இந்நிலையில் அலங்காநல்லூர் அவனியாபுரம் பாலமேடு விழாக்குழுவினர் அதன் தலைவர் ஏ.கே.கண்ணன் தலைமையில் போயஸ் இல்லம் சென்று அதிமுக பொது செயலாளர் சசிகலாவை சந்தித்து ஜல்லிக்கட்டு நடக்க முயர்ச்சி எடுத்ததற்கு நன்றி தெரிவித்து விழாவுக்கு அழைப்பு விடுத்தனர்.
இதே போன்று தலைமை செயலகம் வந்த அவர்கள் முதல்வர் முதல்வர் பன்னீர்செல்வதை சந்தித்தனர்.
அவருக்கு ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிகளை துவக்கி வைக்க வருமாறு அழைப்பு விடுத்தனர்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து ஜல்லிக்கட்டு விழா குழுவினர் சார்பில் தலைவர் ஏ.கே.கண்ணன் பேட்டியளித்தார்.
அப்போது அவர் ஜல்லிகட்டு போட்டி தடை நீங்க முயற்சி எடுத்த அதிமுக பொது செயலாளர் சசிகலா முதல்வர் ஓபிஎஸ் போராட்டம் நடத்திய மாணவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்துவதற்கு தேதிகளை குறித்து விட்டதாகவும், பிப் 5ல் அவனியாபுரதிலும் பிப் 9 பாலமேட்டிலும் பிப் 10ல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் இருவருக்கும் அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் நடக்கும் என்று தெரிகிறது.
