மோடியின் சொந்த மாநிலம் குஜராத்திலும் களைகட்டியது போராட்டம்.. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மும்பையில் ஊர்வலம்…

உச்சநீதிமன்ற தடை உத்தரவு காரணமாக தமிழகத்தில் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதையடுத்து தமிழகம் முழுவதும் எழுச்சிமிகு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், பெண்கள்,சிறுவர்கள் உள்ளிட்ட இதில் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு நடத்தியே தீரவேண்டும் என உறுதியாக உள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் மட்டும் அல்லாமல் த்தை தொடர்ந்து, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர 

பெண்கள் குழந்தைகள் என எழுச்சிமிகு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்கள் மெரினா நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஓபிஎஸ் அறிவித்த பின்னரும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்த போராட்டம் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா கர்நாடகா மற்றும் அமெரிக்கா, கனடா, மலேசியா,ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் வதோதராவில் உள்ள காந்தி சிலைக்கு முன்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன

 மேலும் வாபியில் உள்ள காமராஜர் நாடார் பேரவை மற்றும் வாபி தமிழ்ச்சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பொது மக்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

இதே போன்று மும்பை வாழ் தமிழர்களும் போராட்டத்தில் குதித்தனர். மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் இன்று ஏராளமான தமிழர்கள் போராட்டம் தொடங்கியது.