ரயிலை மறித்தால் போராட்டக்காரர்கள் எப்படி மெரினா செல்வார்கள்..ஸ்டுபிட்… திமுக வுக்கு கொட்டு வைத்த ஜடேஜா…
உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் என எழுச்சியுடன் நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு நாள் வீறு கொண்டு நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் வகையில் தமிழக அரசு அவசரச்சட்டம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், தற்காலிகமாக மட்டுமல்லாமல் நிரந்தரமாக நடத்த அனுமதி வழங்காவிட்டால் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தை இளைஞர்களும், மாணவர்களும் முன்னெடுத்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் எந்தவொரு அரசியல் வாதிகளையும் போராட்டக்காரர்கள் அனுமதிக்கவில்லை, அப்படியே யாராவது அரசியல்வாதிகள் வந்தால் உடனடியாக அவர்களை துரத்தி அடித்து வருகின்றனர்.
அதேபோல் ஒரு சில தரித்துறையினரை மட்டும் அனுமதித்த போராட்டத்தினர் பீட்டாவில் உறுப்பினர்களாக இருக்கும் நடிகர்கள் என்றால் தயவுதாட்சண்யம் இன்றி துரத்தப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே மெரினாவில் நடைபெற்று போராட்டத்தில் கலந்கொள்பவர்களின் எண்னிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் திமுக சார்பில் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதனால் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.
திமுக வின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர் ஜடேஜா, ரயிலை மறித்தால் போராட்டக்காரர்கள எப்படி மெரினா செல்வார்கள்..ஸ்டுபிட் என தனது டவிட்டர் பக்கத்தில் சீறியுள்ளார்.

ரயில் மறியல் போராட்டத்தால் வீறுகொண்டு எழுச்சியுடன் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது எனவும் ஜடேஜா தனது டவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்,
