ஜாக்டோ ஜியோ அமைப்பினர்  இன்று முதல் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் வலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர்.

இது குறித்து சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ அமைப்பின் உயர்மட்டக் குழு கூட்டத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம், உள்ளிட்ட 17  சங்கங்களின் கூட்டமைப்பினர் கலந்துகொண்டனர்.

அப்போது, புதிய ஓய்வூதியத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டி தமிழகம் முழுவதும் வரும் 11ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

இதனிடையே,  கடந்த 7 மற்றும் 8ஆம் தேதிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில்,  உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.