It is important to destroy the dengue - resolution at the village council meeting ...
இராமநாதபுரம்
டெங்குவை ஒழித்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கமுதி ஒன்றியத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாராயணபுரம், கே.நெடுங்குளம், டி.புனவாசல் உள்ளிட்ட 53 கிராம ஊராட்சிகளில் நேற்று கிராம சபைக் கூட்டங்கள் நடைப்பெற்றன.
இந்த கூட்டத்திற்கு கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி முன்னிலை வகித்தார்.
இதில், “தனிநபர் கழிப்பறைகள் கட்டுதல்,
குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல்,
திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்தல்,
குப்பைகளை தெருக்களில் கொட்டுவதை தவிர்த்தல்,
கிராமத்தை தூய்மையாக பராமரிப்பது போன்ற தீர்மானங்களும் அதில் முக்கியத் தீர்மானமாக டெங்கு ஒழிப்பு தீர்மானமும் நிறைவேற்றபட்டன.
இதில், கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
