விவசாயிகளுக்கு வெளிநாடுகளில் பயிற்சி.! பள்ளி மாணவர்களுக்கு பண்ணைச் சுற்றுலா.!- பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்
தமிழக வேளாண் பட்ஜெட்டில் விவசாயத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பண்ணை சுற்றுலா செயல்படுத்த இருப்பாதகவும், வெளாநாடுகளில் உள்ள வேளாண் தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்ளும் வகையில் விவசாயிகளை வெளிநாட்டில் பயறிச்சி அளிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான பட்ஜெட்
தமிழக வேளாண் பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் வாசித்தார். அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தது. குறிப்பாக அயல்நாடுகள் சிலவற்றில் உயர் இரக தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உற்பத்தித்திறன் அண்ணாந்து பார்க்கும் நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. அங்கிருக்கும் தொழில்நுட்பங்களை நம் மாநில உழவர்களும் அறிவது. அவர்களுக்குள் ஊக்கத்தை உண்டாக்கும். பிறகு. மனதில் தங்கி, தாக்கத்தை உண்டாக்கும். நாமும் அப்படி உற்பத்தி செய்ய முடியாதா என்கிற ஏக்கத்தை ஏற்படுத்தும். அது சாகுபடியிலிருக்கும் தேக்கத்தை நீக்கி தேடலை உண்டாக்கும்.. அவர்கள் தங்கள் நிலங்களில் அத்தகைய முயற்சியை மேற்கொள்வார்கள்.
உழவர்களுக்கு அயல்நாட்டில் பயிற்சி
காண்பது நம்பிக்கையாகவும், செய்வது கற்றலாகவும் மாறும். எனவே, 150 முன்னோடி விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து. தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென ஒன்றிய, மாநில அரசு நிதியிலிருந்து மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.பாடப் புத்தகங்களில் படமாகவும், ஊடகங்களில் காணொலியாகவும் கண்ட வயல்களை, தோப்புகளை, தோட்டங்களை, பாசனக் கிணறுகளை, பழமரங்களை, மாணவர்கள் நேரடியாக காண வேண்டுமென்பதற்காகவும். வேளாண்மையின் மகத்துவத்தை அவர்கள் அறிந்து, உணர்ந்து, தெளிந்து, தேற வேண்டுமென்பதற்காகவும்,
பள்ளி மாணவர்களுக்குப் பண்ணைச் சுற்றுலா
பண்ணைச் சுற்றுலா கல்வித் துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படும். மரகத வயல்வெளிகளைக் கான்கிரீட் காடுகளிலிருந்து பெறுகிற விடுதலையாகவும். விளக்கமாகவும், கண்டு மகிழ்கிற பொழுதுபோக்காகவும். உழவர்களின் வியர்வையின் உன்னதத்தைப் புரிந்துகொள்கிற பயிற்சியாகவும், பாடப் புத்தகங்களில் வருகிற வினாக்களுக்கு உண்ணுகிற உணவை, உணவின் அருமையை உணரும் மெய்ஞானமாகவும், இந்தப் பண்ணைச் சுற்றுலா மாணவர்களுக்கு அமையும். இதுபோன்ற சுற்றுலாக்கள் இயற்கையோடு இயைந்து வாழும் நெறியைக் கற்றுத்தரும். அரிசியும், பருப்பும் தொழிற்சாலைகளில் உற்பத்தியாவதாக நினைத்துக் கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்திற்கு இந்தச் சுற்றுலா விழிப்புணர்வை ஏற்படுத்தும். இத்திட்டம் ஒரு கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்