விருதுநகர்

விவசாயிகள் வாழ்வாதாரம் உயர,மக்கள் வாழ்வு மேம்படுவதற்கான  எந்த அறிவிப்புகளும்  இல்லாத இந்த நிதிநிலை அறிக்கையால் ஏமாற்றமே என்று ராஜபாளையம் விவசாயிகள் கூறினர்.

சட்டப்பேரவையில் கடந்த வியாழக்கிழமை அன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதி விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.

அதில், "காவிரி, வைகை, குண்டாறு இணைப்பால் ஏழு மாவட்டங்கள் பயன்பெறும் நிலையில், அது தொடர்பான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. 

அழகர் அணைத் திட்டத்திற்கான ஆய்வுப் பணிக்குக்கூட நிதி ஒதுக்கீடு அறிவிப்பு இல்லை. 

நீர் ஆதாரத்தைப் பெருக்கி விவசாயத்தையும், மாநிலத்தையும் வளப்படுத்தும் அறிவிப்பு இல்லாதது வேதனை அளிக்கிறது. 

கரும்புக்கு மாநில அரசின் ஊக்கத்தொகை அறிவிக்கப்படவில்லை.

விவசாயிகள் வாழ்வாதாரம் உயர,மக்கள் வாழ்வு மேம்படுவதற்கான  எந்த அறிவிப்புகளும்  நிதிநிலை அறிக்கையில் இல்லை" என்று தெரிவித்தனர்.

வறட்சியால் கடந்த ஆண்டு நட்டமடைந்த விவசாயிகளுக்கு முழு நிவாரணம் உடனே வழங்கவேண்டும் என்று தழிழக விவசாயிகள் சங்க ராஜபாளையம் நகரச் செயலாளர் முருகேசன் கோரிக்கை வைத்தார்.