தஞ்சையில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ரத்துக்கு தமிழக அரசு காரணமா? தமிழக அரசு விளக்கம்

நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ரத்து தொடர்பாக இந்திய தொல்லியல் துறை அனுப்பிய கடிதத்தையும் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு வெளியிட்டுள்ளது.

Is the Tamil Nadu government responsible for the cancellation of Natyanjali program in Thanjavur? Tamil Nadu Govt Explanations sgb

தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழாவை நடத்த திமுக அரசு அனுமதி மறுத்ததாக பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறிய குற்றம்சாட்டிற்கு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.

இந்த ஆண்டு, சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற இருந்த நாட்டியாஞ்சலி விழாவுக்கு, திமுக அரசு அனுமதி மறுத்ததால், விழா ரத்து செய்யப்பட்டிருக்கிறது என அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியிருக்கிறார். இது குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.

அதில், 'தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழாவை நடத்த அனுமதி மறுத்தது திமுக அரசு' என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது வதந்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் குவால்காம் நிறுவனத்தின் புதிய வடிவமைப்பு மையம்; மார்ச் 14ஆம் தேதி திறப்பு விழா

மேலும், "நாட்டியாஞ்சலி விழாவை தமிழ்நாடு அரசு ரத்து செய்யவில்லை. நாட்டியாஞ்சலி விழாவுக்கு அனுமதி மறுத்தது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல் துறைதான்" எனவும் கூறியிருக்கிறது.

மேலும், "தஞ்சை பெருவுடையார் கோவிலில் சிவராத்திரி அன்று நிகழ்ச்சிகள் நடத்த, இந்திய தொல்லியல் துறை அனுமதி மறுத்துள்ளது. ஆகையால்தான், 20 ஆண்டுகளாக நடைபெற்ற நாட்டியாஞ்சலி இந்த ஆண்டு நடைபெறவில்லை. எனவே, திரு. அண்ணாமலை கூறிய தகவல் உண்மையல்ல!" என்று உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் கொடுத்துள்ளது.

நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ரத்து தொடர்பாக இந்திய தொல்லியல் துறை அனுப்பிய கடிதத்தையும் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவித்த சீமான்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios