Is the Tamil language compulsory lesson in CBSE schools?
தருமபுரி
சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாய பாடமாக வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 4-வது மாவட்ட மாநாடு நேற்று நடைப்பெற்றது. இதற்கு அ.வெ.சாமிக்கண்ணு மற்றும் சிங்காரவேலு தலைமை தாங்கினார்.
இதில், எழுத்தாளர் மதுக்கூர் ராமலிங்கம், மாநில துணை பொதுச் செயலர்கள் ஆதவன் தீட்சண்யா, ரா.தெ.முத்து, கவிஞர் நவகவி, மாவட்டச் செயலர் நாகை பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில், "ஏழை, எளிய மக்களை பாதிக்கும் வகையில் உள்ள நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்.
இந்தியாவில் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்.
சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாய பாடமாக வைக்க வேண்டும்.
நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச பேருந்து அட்டை வழங்க வேண்டும்.
சாதியின் பெயரைக் கொண்டுள்ள கிராமங்களின் பெயர்களை மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
