Is it wrong in water supply? Please report to the district administration in the VATS number ...
இராமநாதபுரம்
குடிநீர் விநியோகத்தில் ஏதேனும் முறைகேடுகள் இருந்தால், நீங்களே அது தொடர்பாக புகார்களை தெரிவிக்க வாட்ஸ் அப் எண் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று ஆட்சியர் நடராஜன் தெரிவித்தார்.
இராமநாதபுரம் ஆட்சியர் நடராஜன் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “இராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பான கோரிக்கைகள், புகார்கள் மற்றும் குடிநீரை முறைகேடாக பயன்படுத்துபவர்கள் பற்றிய தகவல்களை மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க 04567–230431 என்ற தொலைபேசி வசதியுடன், 18004257040 என்ற கட்டணமில்லா தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
இதனால், தவறிழைத்தவர்களை அடையாளம் காணுவதில் மிகுந்த சிரமம் இருந்தது. மேலும், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டும் வந்தது.
இந்நிலையில் தற்போது மக்கள் குடிநீர் விநியோகம் தொடர்பான கள நிலவரத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு உள்ளபடியே தெரிவிப்பதற்கு ஏதுவாக 9585994700 என்ற எண்ணில் வாட்ஸ் அப் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அதில் மாவட்ட ஆட்சியர், திட்ட இயக்குனர் மற்றும் குடிநீர் விநியோகத்தை செயல்படுத்தக்கூடிய அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் ஆகியோர்களது வாட்ஸ் அப் தொலைபேசி எண்களும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த வாட்ஸ் அப் குரூப்பில் மக்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பர்” என்று ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
