Asianet News TamilAsianet News Tamil

சிறப்பு விமான சுற்றுலா சேவையை அறிமுகப்படுத்திய IRCTC.. பயணம், கட்டண விவரங்கள் இதோ..!

இந்திய ரயில்வே சுற்றுலா பிரிவின் IRCTC - யானது திருச்சியில் இருந்து விமான சேவை மூலம் சிறப்பு சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 
 

IRCTC has launched a special air travel service Read details
Author
First Published Jul 19, 2023, 3:03 PM IST

இந்திய ரயில்வே சுற்றுலா பிரிவின் IRCTC - யானது திருச்சியில் இருந்து விமான சேவை மூலம் சிறப்பு சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்திய ரயில்வே ஆணையம் ஐ.ஆர்.சி.டி.சியின் ஆன்மிக சுற்றுலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு ஆன்மிக சுற்றுலாக்களை இந்திய ரயில்கள் மூலம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தற்போது புதிய முயற்சியாக திருச்சி விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமான சேவை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் முதல் முயற்சியாக ஆன்மிக சுற்றுலாவை அறிவித்துள்ளது. 

*  புனித தளங்களான காசி, கயா, அலகாபாத், அயோத்தி ஆகிய ஆன்மிக தளங்களை 7 நாட்கள் சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு 40,500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

IRCTC has launched a special air travel service Read details

*  சார்தாம் யாத்திரை, கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்திரி, ரிஷிகேஷ், ஹரித்துவார் ஆகிய தளங்களை சுற்றிப் பார்க்க 13 நாள் பயணத்திற்கு நபர் ஒருவருக்கு 68,150 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு சுற்றுலாவிற்காக பெறப்படும் கட்டணத்தில் இருந்து விமான கட்டணம், உள்ளூர் போக்குவரத்து, தங்கும் இடம், உணவு, சுற்றுலா மேலாளர், பயணக் காப்பீடு, ஜி.எஸ்.டி ஆகியவையும் உள்ளடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி தொடங்கப்படவுள்ள காசி, கயா யாத்திரை காலை 8:30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்திலிருந்து புறப்படும். பிறகு ஆகஸ்ட் 17ஆம் தேதி மீண்டும் திருச்சியை வந்து அடையும் வகையில் பயணம் அமைக்கப்பட்டுள்ளது.

IRCTC has launched a special air travel service Read details

கேதார்நாத், பத்ரிநாத் யாத்திரையை உள்ளடக்கிய 13 நாள் பயணம் அக்டோபர் 27ஆம் தேதி திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மீண்டும் நவம்பர் 8 தேதி திருச்சி விமான நிலையத்தை வந்தடையும் வகையில் பயணம் வகுக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு தொடர்ப்பு  எண்கள் :

திருச்சி _ 8287932070

மதுரை - 8287931977, 8287932122

சென்னை - 9003140682, 9003140680, 8287931964

இணையதளம் முகவரி - www.irctctourism.com தொடர்ப்பு கொள்ளவும் என IRCTC தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios