திரு­நெல்­வேலி:

ஹாஜி மஸ்­தான் வாழ்க்­கையை சித்­த­ரிக்­கும் பட விவ­கா­­­ரத்­தில் நடி­கர் ரஜி­னி­காந்த்தை, மிரட்­டு­வது கண்­டிக்­க­தக்­கது என்று சரவணப் பொய்கை படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கும் நடிகர் காரல்­மார்க்ஸ் தெரிவித்தார்.

திரு­வள்­ளு­வர் கலைக்­கூ­டம் தனியார் லிமிடெட் நிறு­வ­னம் சார்­பில் இயக்­கு­னர் சேகர் தயாரிப்­பில் “சர­வ­ணப் பொய்கை” என்ற படம் தயா­ரிக்­கப்­பட்­டு விரை­வில் வெளி­யி­டப்­ப­ட உள்­ளது.

இதன் பாடல் சி.டி., வெளி­யீட்டு விழா நெல்லை பேரின்­ப­வி­லாஸ் தியேட்­ட­ரில் நேற்று நடந்­தது. இதில், இயக்­கு­னர் சேகர், நடி­கர் காரல்­மார்க்ஸ் ஆகி­யோர் சிடியை வெளி­யிட, பேரின்­ப­வி­லாஸ் தியேட்­டர் அதி­பர் ஜெய­ராஜ், ரஞ்­சித் மற்­றும் பாரதி கண்­ணன் பெற்­றுக் கொண்­ட­னர்.

அதனைத் தொடர்ந்து இயக்­கு­னர் சேகர் செய்தியாளார்களிடம் கூறியது:

‘இது­வரை 17 குடும்ப படங்­களை இயக்­கி­யுள்­ளேன். தற்­போ­தைய கால­ சூழ்­நி­லைக்கு ஏற்றபடி முதல் முறை­யாக காதல் சப்­ஜெக்ட் படத்தை இயக்­கி­யுள்­ளேன். சினிமா டிரென்ட் மாறும்போது அதற்கு ஏற்­ற­படி, நானும், மற்ற இயக்­கு­னர்­­­க­ளும் தங்­களை மாற்­றிக் கொள்­ள ­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

தியேட்­ட­ரில் டிக்­கெட் கொடுக்­கும் வேலை பார்க்­கும் ஒரு தொழி­லா­ளியை மைய­மாக கொண்­டது கதை. கதா­நா­ய­­­க­னாக எனது மகன் காரல் மார்க்ஸ், கதா­நா­ய­கி­யாக அருந்ததியும் நடிக்­கின்­ற­னர்” என்று கூறினார்

படம் குறித்து நடி­கர் காரல் மார்க்ஸ் கூறியது”

‘புது­­­மு­க­மாக “சர­வ­ணப் பொய்கை” படத்­தில் அறி­மு­கம் ஆகி­யுள்­ளேன். படத்­தில் விவேக், கரு­ணாஸ், எம்.எஸ்.பாஸ்­கர், அருந்­ததி உள்­ளிட்ட பலர் நடித்­துள்­ள­னர்.

தொழி­லா­ளி­யாக நான் நடித்த படம் என்­ப­தால் தமி­ழ­கம் முழு­வ­தும் தொழி­லா­ளர்­கள் அதிகம் உள்ள 100 இடங்­களை தேர்வு செய்து படத்­தில் பாடல் சிடிக்­களை வெளி­யிட்டு வரு­கி­றோம். எனக்கு மக்­கள் நல்ல ஆத­ரவு தரு­கின்­ற­னர். தொடர்ந்து அனை­வ­ரும் ஆதரித்து படத்தை வெற்­றி­ய­டைய செய்­ய ­வேண்­டும்.

தியேட்­டர்­க­ளில் படம் வெளி­யான நாளி­லேயே இணை­ய­த­ளம் மூல­மா­க­வும், திருட்டு விசிடி மூல­மா­க­வும் படம் வெளி­யா­கி­றது. இதை தமி­ழக, மத்­திய அர­சு­கள் தலை­யிட்டு தடுக்க வேண்டும். இந்த கோரிக்­கையை வலி­யு­றுத்தி ஜூன் 1-ஆம் தேதி நடி­கர் சங்­கத் தலை­வர் விஷால்­ தலை­மை­யில் கூட்­டம் நடக்­கி­றது.

ஹாஜி மஸ்­தான் வாழ்க்­கையை சித்­த­ரிக்­கும் பட விவ­கா­­­ரத்­தில் நடி­கர் ரஜி­னி­காந்த்தை, மிரட்­டு­வது கண்­டிக்­க­தக்­கது” என்று கூறினார்.