சிதம்பரத்தில், உடலில் அதிக காயங்களுடன், இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை, சாமியார்பேட்டைக் கடற்கரையில், திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் நேற்று காலை கரை ஒதுங்கியது. ஒன்றரை டன் எடையும், 7 அடி நீளமும், 2 அடி உயரமும் கொண்ட திமிங்கலத்தின் உடலைப் பார்த்த அப்பகுதி மீனவர்கள், வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
கடலூர் வனத் துறையினர் திமிங்கலத்தைக் கைப்பற்றி, புவனகிரி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திமிங்கலம் உயிரிழப்புக்கான காரணம் குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதகுறித்து அப்பகுதி மீனவர்கள் தெரிவித்ததாவது: “இறந்த இந்த திமிங்கலம் உடலில் காயங்கள் அதிகம் இருப்பதால் படகுகளில அடிப்பட்டு இறந்திருக்கலாம்” எனத் தெரிவித்தனர்
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:57 AM IST