திருநெல்வேலி

தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தில் செயல்படுவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டக் கிளை சார்பில்  நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மேலப்பாளையம் சந்தை திருப்பத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவர் எல்.கே.எஸ். மீரான்முகைதீன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் எஸ்.எம். கோதர்மைதீன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், " சிரியாவில் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்; 

திரிபுரா மாநிலத்தில் எதிர்கட்சித் தலைவர்களின் சிலைகள், அலுவலகங்கள் தாக்கப்படுவது மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்; 

தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தில் செயல்படுவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் மாவட்டச் செயலர் பாட்டபத்து எம். முகம்மதுஅலி, மாவட்ட துணைத் தலைவர் நாகூர்கனி, பொருளாளர் கானகத்து மீரான், முன்னாள் தலைவர் கவிஞர் எம்.ஏ. ரஹ்மான், மாவட்ட இளைஞரணிச் செயலர் எம். முகம்மதுகடாபி, மேலப்பாளையம் நகரத் தலைவர் முகைதீன்அப்துல் காதர், செயலர் ஜாஹீர்உசேன், பொருளாளர் மில்லத் காஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.